வாட்ஸ்அப் செயலியில் View Once அம்சத்தை பயன்படுத்துவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!
டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை விட வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு
புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது ஏதாவது
ஒரு அம்சங்கள் வெளிவருகின்றன, அதேபோல் இந்த அம்சங்கள் மக்களுக்கு மிகவும்
பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் என்ற புதிய அம்சம்
அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் எப்படி வேலைசெய்யும் என்றால், நாம்
அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெறுநரால் ஒரு முறை மட்டுமே
பார்க்க முடியும்.
இன்றும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் அம்சம்
கிட்டத்தட்ட காணாமல் போகும்(Disappearing) மெசேஜ்களைப் போன்றது தான்.
குறிப்பாக இதன் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படங்களை ரீசரிவர் ஒருமுறை
பார்த்தவுடன் அது சாட்டில் இருந்து மறைந்து விடும்.
குறிப்பாக பயனர்கள் வியூ ஒன்ஸ் என்ற விருப்பத்தை இயக்கியவுடன்
அனுப்பப்பட்ட வீடியோ அல்லது புகைப்படங்கள் மற்றவர்களால் ஒருமுறை மட்டுமே
பார்க்க முடியும். ஏற்கனவே இன்ஸ்டா பக்கத்தில் இதேபோன்று வேனிஷ் மோட் எனும்
ஒரு அம்சம் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த வியூ ஒன்ஸ் மீடியா ஃபைல்களை பெறுநரால் ஒருமுறை மட்டும்
தான் பார்க்க முடியும். மீண்டும் அதைப் பார்க்க விரும்பினால் அனுப்புனர்
அதை மீண்டும் ஒரு முறை அனுபப்பினால் மட்டுமே பார்க்க முடியும். பின்பு வியூ
ஒன்ஸ் மீடியா ஃபைல்களை அனுப்பவோ, அதை சேமிக்கவோ முடியாது.
நீங்கள் 14 நாட்களுக்குள் வியூ ஒன்ஸ் ஃபைலை திறக்காவிட்டால் அது
தானாகவே சாட்டில் இருந்து மறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வியூ ஒன்ஸ் அம்சத்தை பயன்படுத்தினாலும் கூட புகைப்படத்தை பெறுநரால்
ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியும் மற்றும் வீடியோவை ஸ்க்ரீன்ரெக்கார்டிங்
செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பயன்படுத்தும்
வழிமுறைகளைப் பார்ப்போம்.
வழிமுறை-1
வாட்ஸ்அப் செயலியை திறந்து, அட்டச்மெண்ட ஐகானை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2
அடுத்து நீங்கள் கேலரியில் அனுப்ப விரும்பும் வீடியோ அல்லது புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
வழிமுறை-3
நீங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோவை தேர்வுசெய்த பின்பு கேப்ஷன் சேர்க்கவும் என்ற பகுதியில் தெரியும் கடிகார ஐகானை
கிளிக் செய்து வியூ ஒன்ஸ் அம்சத்தை செயல்படுத்தவும்.
வழிமுறை-4
அதன்பின்னர் போட்டோ செட் டு வியூ ஒன்ஸ் என்ற செய்தி உங்கள் திரையில் தெரியும்.அவ்வளவுதான்.