கணினியில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நெட்வொர்க் பிரச்சனை
ஏற்படுவது சாதாரண விஷயம் தான். நெட்வொர்க் பிரச்சனை இண்டர்நெட் இணைப்பில்
இடைவெளி ஏற்படும் போது மட்டுமே ஏற்படும். சமயங்களில் நெட்வொர்க் செட்டிங்
மற்றும் டிரைவர்களில் கோளாறு இருந்தாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படலாம்.
நெட்வொர்க் பிரச்சனைகளை டிரபிள்ஷூட் செய்வதற்கான ஆப்ஷன்கள்
வழங்கப்பட்டு இருப்பதே விண்டோஸ் 10 இயங்குதளத்தின் முக்கிய அம்சங்களில்
ஒன்றாக இருக்கிறது. இந்த தொகுப்பில் நெட்வொர்க் இணைப்பினை ரீசெட் செய்ய
இரண்டு வழிமுறைகள் பற்றி பார்ப்போம். இதை கொண்டு நெட்வொர்க் சார்ந்த
பிரச்சனைகளை நெட்வொர்க் ரீசெட் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
விண்டோஸ் 10 நெட்வொர்க் செட்டிங் பயன்படுத்துவது
நெட்வொர்க் செட்டிங்கை ரீசெட் செய்ய செட்டிங் ஆப் தேவை. இங்கு விண்டோஸ் 10
தளத்தில் நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து
பார்ப்போம்.
வழிமுறை 1 - முதலில் ஸ்கிரீனின் இடதுபுறத்தில் உள்ள ஸ்டார்ட் பட்டனை க்ளிக்
செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்ததும் பல்வேறு ஆப்ஷன்கள் திரையில்
தோன்றும். இனி கீழ்புறமாக ஸ்கிரால் செய்து செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்ய
செய்து நெட்வொர்க் மற்றும் இண்டர்நெட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 2 - இனி ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து நெட்வொர்க் ரீசெட் ஆப்ஷனை
தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் விண்டோஸ் 10 நெட்வொர்க் செட்டிங்
ரீசெட் செய்யப்பட்டு விடும்.
கமாண்ட் பிராம்ப்ட் (CMD) பயன்படுத்துவது
மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் நெட்வொர்க் பிரச்சனைகளை சரி
செய்ய முடியவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி
நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்யலாம். கமாண்ட் பிராம்ப்ட் மூலம்
நெட்வொர்க் செட்டிங்கை எளிமையாக ரீசெட் செய்து கொள்ளலாம்.
வழிமுறை 1 - முதலில் கம்ப்யூட்டரில் விண்டோஸ் ஐகான் க்ளிக் செய்து கமாண்ட்
பிராம்ப்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 2 - கமாண்ட் பிராம்ப்ட் திரையில், netsh winsock reset என டைப்
செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.