இணைய வசதிக்கான வைபை பாஸ்வேர்டை மறந்து விட்டீர்களா? வைபை ரவுட்டரை
ரீசெட் செய்வதை தவிற வேறு வழியில்லையா? வீட்டு வைபை இணைப்பில் புதிய
சாதனத்தை பயன்படுத்த முற்படும் போதோ அல்லது வீட்டிற்கு வரும் நண்பர் அல்லது
உறவினருக்கு வைபை பாஸ்வேர்டு கொடுக்க முற்படும் போது பாஸ்வேர்டு நினைவில்
இருக்காது.
இதுபோன்ற சூழல்களில் ரவுட்டரை ரீசெட் செய்யாமல் பாஸ்வேர்டை கண்டறிய
வழிமுறை இருக்கிறது. இதை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தொடர்ந்து
பார்ப்போம்.
செட்டிங்ஸ்
பாஸ்வேர்டை கண்டறிய பல்வேறு வழிகள் இருக்கின்றன. விண்டோஸ் அல்லது மே என
எந்த சாதனத்தை பயன்படுத்தினாலும், ரவுட்டரின் செட்டிங்ஸ் பக்கம் செல்ல
வேண்டும். இவ்வாறு செய்ய ஏதேனும் ஒரு சாதனத்தில் வைபை ஏற்கனவே
இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஈத்தர்நெட் கேபிள்
ஒருவேளை வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட சாதனம் எதுவும் இல்லையெனில்
ரவுட்டரில் இருக்கும் WPS புஷ் பட்டன் க்ளிக் செய்தோ அ்லது ஈத்தர்நெட்
கேபிள் மூலம் இணைப்பை பயன்படுத்தி ரவுட்டரின் செட்டிங்ஸ் பக்கத்தை
திறக்கலாம்.
கண்டறிவது மிகவும் எளிய வழிமுறையே
எனினும், வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டை எப்படி கண்டறிவது? வைபை பாஸ்வேர்டை
பலமுறை மாற்றியிருந்தாலும் மாற்றவில்லை என்றாலும் அதனை கண்டறிவது மிகவும்
எளிய வழிமுறையே. இதற்கு விண்டோஸ் அல்லது மேக் கம்ப்யூட்டரில் இருந்து
ஏற்கனவே வைபை நெட்வொர்க்கை இணைத்திருந்தாலே போதுமானது.
வழிமுறை 1:
விண்டோஸ் அல்லது மேக் சாதனத்துடன் வைபை இணைக்கப்பட்டிருந்தால் செய்ய வேண்டியவை.
1 - விண்டோஸ் சாதனத்தில் செய்வது எப்படி?
- டாஸ்க்பாரில் இருக்கும் விண்டோஸ் வைபை ஆப்ஷனை ரைட் க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி Open Network and Sharing center ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்த திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் Change adapter settings ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி வைபை ஆப்ஷனை இருமுறை க்ளிக் (டபுள் க்ளிக்) செய்ய வேண்டும்.
- வைபை ஸ்டேட்டஸ் பக்கத்தில், Wireless Properties ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி செக்யூரிட்டி ஆப்ஷனில் ஷோ பாஸ்வேர்டு (Show password) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2 - மேகின்டோஷ் சாதனத்தில் செய்வது எப்படி?
- வைபை ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி Open Network Preference ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து ஷோ பாஸ்வேர்டு (Show password) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 2:
சாதனத்தில் வைபை இணைக்கப்பட்டதில்லை எனில் செய்ய வேண்டியவை.
1 - ஈத்தர்நெட் கேபிள் பயன்படுத்துவது
- விண்டோஸ் கம்ப்யூட்டரில் RJ45 கேபிளை இணைத்து ரவுட்டரின் கான்ஃபிகரேஷன்
பக்கத்தை திறக்க வேண்டும்.
- லாக்-இன் விவரங்களை கவனமாக பதிவிட வேண்டும்.
- லாக்-இன் செய்ததும் வைபை ஆப்ஷனை க்ளிக் செய்து பாஸ்வேர்டு அல்லது
செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி ஷோ பாஸ்வேர்டு (Show password) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2 - எந்த சாதனத்திலும் WPS பட்டன் பயன்படுத்துவது எப்படி?
பாஸ்வேர்டி இல்லாமல் WPS மூலம் பயனர்கள் வைபை நெட்வொர்க்கில் இயக்க
முடியும். இதற்கு பயனர்கள் ரவுட்டரின் பின்புறம் இருக்கும் WPS பட்டனை
க்ளிக் செய்து சாதனத்துடன் இணைக்க வேண்டும். இணைக்கப்பட்டதும் வழிமுறை 1-ஐ
பயன்படுத்தி பாஸ்வேர்டை கண்டறிந்து கொள்ளலாம்.
Tags:
Tech Tips