கூகுள் கொண்டு வந்த புதிய வசதி.! Google Assistant, Read It .!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.


கூகுள் அசிஸ்டன்ட், இதைப் படி (Google Assistant Read It)
 
இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஒரு புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது, அது என்னவென்றால், கூகுள் அசிஸ்டன்ட், இதைப் படி (Google Assistant Read It) எனும் நான்கு சொற்கள் ஆகும். அதாவது நீண்ட வாசிப்புகளுக்குப் பிறகு நீங்கள் சோர்வடைந்தால் கண்டிப்பாக இந்த அம்சம் உதவும்.




கூகுள் நிறுவனம் 

குறிப்பாக கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் நீண்ட வலைப்பங்களைக் கேட்ட இந்த வசதி உதவும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த வசதி பல்வேறு மக்களுக்கும் கண்டிப்பாக உதவும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.


சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த 2000 வார்த்தைக் கொண்ட வலைப்பக்கத்தைப் படி என்று கூகுள் அசிஸ்டன்ட்-க்கு நீங்கள் கட்டளையிட்டால், நீங்கள் ஜாகிங் செய்யும் போது கூட, அது உங்களுக்காக அதை படித்துக்காட்டும்.

மிகப் பெரிய வரப்பிரசாதமாக வருகிறது

மேலும் வலைப்பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி புரியாத நபர்களுக்கும் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் இந்த அம்சம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



கூடிய விரைவில் 

கூகுள் அசிஸ்டன்ட் உள்ளடக்கத்தைக் 42மொழிகளில் மொழிபெயர்க்க முடியும், அவற்றில் 11 இந்திய மொழிகளாக இருக்கிறது, மேலும் தற்போது இந்நிறுவனம் கொண்டுவந்த 'இதைப் படி அம்சம்" அங்கிலத்தில் மட்டுமே இயங்குகிறது, கூடிய விரைவில் அனைத்து மொழிகளுக்கான ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

2ஜி தரவிலும் செயல்படும் 

கூகுள் இந்த அம்சத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் வெளியிட்டது, இந்த அம்சம் வைஃபை மற்றும் இணையத் தரவைத் தவிர 2ஜி தரவிலும் செயல்படும் என்று கூகுள் கூறியுள்ளது.
 
மொழிபெயர்ப்பு அம்சம் 

குறிப்பாக மொழிபெயர்ப்பு அம்சம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பக்கத்தை மொழிபெயர்க்க உதவுகிறது, மேலும் இந்நிறுவனம் இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் பேச்சு தொகுப்பு ஏஐ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த வசதி பயனபடுத்துவது எப்படி என்று பார்ப்போம்

-முதலில் கூகுள் அசிஸ்டன்ட் செயலியை ப்ளே ஸ்டோரில் (Play Store) இருந்து பதிவிறக்கம் செய்யவும்.

-குறிப்பிட்ட பக்கத்தை படிக்க கூகுள்-க்கு நீங்கள் அறிவுறுத்தும்போது, கூகுள் அசிஸ்டன்ட் அதைப் படிக்க துவங்கும்.

-இது உரையை முன்னிலைப்படுத்தும் மற்றும் உரையை வாசிக்கும் போது பக்கத்தை தானாக ஸ்கிரோல் செய்யும். உரையில் நீங்கள் எவ்வளவு தூரம் வந்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள இது உதவும்
-குறிப்பாக வாசிப்பு வேகத்தை கட்டுப்பத்தலாம், எனவே அசிஸ்டன்ட் உங்களுக்கான ஒரு செய்முறையைப் படிக்கின்றது, நீங்கள் எல்லா படிகளையும் பின்பற்றுவதற்கு மெதுவாக வாசிக்கும்படி அதை மாற்றலாம்.

எழுத்துப்பிழைகளை திருத்தி அவற்றைப் படிக்காது
இந்த அம்சத்தில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், கூகுள் அசிஸ்டன்ட் எழுத்துப்பிழைகளை திருத்தி அவற்றைப் படிக்காது, இருப்பினும் கூகுள் அசிஸ்டன்ட் லிங்கஸ் பட்டன் மற்றும் மெனுக்கள் போன்றவற்றை தானாகவே ஸ்கிப் செய்துவிட்டு படிக்கும்.

Post a Comment

Previous Post Next Post