வாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்!

சமீபத்திய ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.14 அப்டேட்டின் படி டார்க் மோடு சோதனை செய்யப்பட்டு வருகிறது, அடுத்து வாட்ஸ்அப்பில் கிடைக்கவுள்ள மூன்று புதிய மாற்றங்களுக்கான சோதனை அம்ஸங்களுடன் வெளியாகவுள்ளது. சோதனை செய்யப்பட்டு வரும் இந்த மூன்று புதிய வாட்ஸ்அப் அம்சங்களைப் பற்றிய துல்லியமான தகவலை WABetaInfo தளம் வெளியிட்டுள்ளது.

 
 
 
வாட்ஸ்அப் இல் அடுத்து களமிறங்கும் அம்சங்கள் 
 
வாட்ஸ்அப் தற்பொழுது அனிமேஷன் ஸ்டிக்கர், டெலிட் மெசேஜஸ் அம்சத்தில் சில மாற்றங்கள் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான iCloud Keychain அம்சத்தையும் தனது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது. இந்த மூன்று புதிய அம்சங்களின் சிறப்பு மட்டும் சேவைகள் என்ன என்று பார்க்கலாம்.

 
வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர் அம்சம் 
 
வாட்ஸ்அப் இல் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அனிமேஷன் ஸ்டிக்கர் அம்சம் ஒரு சிறிய பிளே ஐகான் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் அனிமேஷன் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத ஸ்டிக்கர்களுக்கு இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த அம்சம் சோதனையின் கீழ் உள்ளது, இருந்தாலும் சமீபத்திய பீட்டாவில் உங்களால் இந்த அம்சத்தைப் பார்க்க முடியாது.


 
வாட்ஸ்அப் டெலிட் மெசேஜஸ் அம்சம் 
 
வாட்ஸ்அப் இல் சோதனை செய்யப்பட்டு வரும் அடுத்த முக்கிய அம்சமானது இந்த டெலிட் மெசேஜஸ் அம்சம் தான். தற்பொழுது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சத்தின்படி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாட்டில் உள்ள மெசேஜ்களை தானாகவே அழியும் படி உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் 2.20.14 வெர்ஷனில் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக WABetaInfo கூறியுள்ளது.

 
 
வாட்ஸ்அப் அக்கவுண்ட் டிரான்ஸ்பர் அம்சம் 
 
வாட்ஸ்அப் இறுதியாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் டிரான்ஸ்பர் என்ற புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தின்படி பயனர்கள் தங்களின் புதிய ஸ்மார்ட்போனில் எந்த ஒரு சான்றுமில்லாமல் எளிதாக தங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உடனடியாக அவர்களின் புதிய போனிற்கு மாற்றம் செய்துகொள்ளலாம். விரைவில் வந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post